Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › பயண வழிகள் › அப்சலோமிடமிருந்து தாவீது தப்பி ஓடுகிறார்

பயண வழிகள்

அப்சலோமிடமிருந்து தாவீது தப்பி ஓடுகிறார்

ஒலிவ மலை வழியாக மகனாயீமுக்கு, கில்கால் வழியாகத் திரும்புதல் · 7 நிறுத்தங்கள் · நேர்க்கோடுகளில் ≈ 130 கி.மீ.

எருசலேம்ஒலிவமலைபகூரிம்மகனாயீம்கில்கால்10 கி.மீ.123456

© OpenStreetMap contributors

நிறுத்தங்கள்

  1. எருசலேம்2 சாமு 15:14அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்தில் உள்ள தன்னுடைய எல்லா வேலைக்காரர்களையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் விரைவாக நம்மிடம் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் தீங்கு வரச்செய்து, நகரத்தைக் கூர்மையான பட்டயத்தால் அழிக்காதபடி விரைவாகப் புறப்படுங்கள் என்றான்.
  2. கீதரோன்2 சாமு 15:23அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
  3. ஒலிவமலை2 சாமு 15:30தாவீது தன்னுடைய முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடு இருந்த எல்லா மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
  4. பகூரிம்2 சாமு 16:5தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,
  5. மகனாயீம்2 சாமு 17:24தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.
  6. கில்கால்2 சாமு 19:15ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்வரை வந்தபோது, யூதா மனிதர்கள் ராஜாவுக்கு எதிராகப்போய், ராஜாவை யோர்தானைக் கடக்கச்செய்த கில்கால்வரை வந்தார்கள்.
  7. எருசலேம்2 சாமு 20:3தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது, வீட்டைக்காக்க ராஜா வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அதன்பின்பு அவர்களிடம் அவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை; அப்படியே அவர்கள் மரணமடைகிற நாட்கள்வரை அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் விதவைகளைப்போல இருந்தார்கள்.

கோடுகள் உரையின் வரிசையில் நிறுத்தங்களை இணைக்கின்றன. கோடு நிலத்தின் வழியைப் பின்பற்றும் இடத்தில், அது ஓர் அறிஞர் மீண்டும் வரைந்த சாத்தியமான சாலை; மற்ற இடங்களில் நேர்கோடு — சாலை தெரியவில்லை. தொலைவுகள் நிறுத்தங்களுக்கு இடையிலான நேர்கோடுகள். புள்ளிக்கோடு: கப்பலில். மங்கியது: இருப்பிடம் உறுதியற்றது.

ஒவ்வொரு புள்ளியும் மிகவும் சாத்தியமான இருப்பிடம்; மங்கிய புள்ளி அடையாளம் உறுதியற்றது என்று பொருள். இருப்பிடம் தெரியாத இடங்கள் வரைபடத்தில் இல்லை.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · UBS Bible Routes, Dr Leen Ritmeyer © United Bible Societies 2023, CC BY-SA 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்