Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › புனிதப் பயணிகள் › கிரேக்கத்தில் பவுல் › பிலிப்பி: சதுக்கமும் பவுலின் சிறையும்

கிரேக்கத்தில் பவுல் · நிறுத்தம் 3 · நாள் 1

பிலிப்பி: சதுக்கமும் பவுலின் சிறையும்

வேதாகமத்தில்

பவுலும் சீலாவும் சந்தைவெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையில் போடப்பட்டார்கள்; நடுராத்திரியில் அவர்கள் பாடிக்கொண்டிருந்தபோது, ஒரு பூமியதிர்ச்சி சிறைக் கதவுகளைத் திறந்தது. பின்னர் பவுல் இங்குள்ள பரிசுத்தவான்களுக்குக் கடிதம் எழுதினான்.

அப் 16:19–26அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.
பிலி 1:1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:

பாரம்பரியம்

ஆரம்பக் கிறிஸ்தவக் காலம் முதல் சதுக்கத்தின் அருகிலுள்ள ஒரு சிறிய ரோம நிலவறை பவுலின் சிறையாகக் காட்டப்படுகிறது; அது பெரும்பாலும் ஒரு நீர்த்தொட்டியாக இருந்திருக்கலாம். இங்கிருந்த ஒரு ஆரம்பகால ஆலயம் 4-ஆம் நூற்றாண்டில் பவுலுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று இங்கே

வியா எக்னாத்தியா வழியே அகழ்வாய்வுகள்: 2-ஆம் நூற்றாண்டுச் சதுக்கம், அரங்கம், எண்கோண ஆலயம், பெரிய பேராலயங்கள்; உலகப் பாரம்பரியச் சின்னம்.

பயணிப்பதற்கு முன், உங்கள் நாட்டின் பயண ஆலோசனையைச் சரிபாருங்கள். திறந்திருக்கும் நேரங்களும் தலங்களின் விதிகளும் மாறுகின்றன — அவற்றின் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பாருங்கள்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்